சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/லாபக்கணக்கு

“என்னம்மா இன்னிக்கு நீ மீனா?”

“ஆமாம் மீனுதான் வேணும்னு வரவங்க சொல்லறாங்க .”

“நான் நண்டு கொண்டு வந்திருக்கேன்.”

“இன்னிக்கு வியாபாரம் எப்படி இருக்குமோ தெரியலையே ?”

“நேத்து எப்படி போச்சு ?”

“நேத்திக்கு மழை வந்து வியாபாரமே இல்ல. மீனெல்லாம் அழுகி போச்சு. தூக்கி கடாசிட்டேன்.”

“இன்னிக்கு விலை எவ்ளோ வச்சிருக்க.”

“நேத்து நஷ்டமா போச்சு. அத சரி கட்டணுமே.”

“எவ்ளோன்னு விலை வச்சிருக்கேன்னு சொல்லேன்?”

“ஒரு மீனு 50 ரூத்தான்.”

“உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா ?”

“என்ன சொல்லேன்?”

“ஒரு மீனு 50 ரூச்சொன்னா,  விலை சாஸ்தின்னு கம்மி மீனு விக்கும்.  அதே 20 குறைச்சு சொல்லி, 30 ரூச்சொன்னா விலை கம்மின்னு   சந்தோசமா வாங்கிக்குவாங்க.”

“அப்போ நமக்கு நஷ்டம் ஆச்சே.”

“அதிக விலை வச்சு கம்மியா விக்றத விடக் கம்மியா விலை வச்சு நிறைய வித்து சின்ன சின்ன நிறைய லாபம் பாக்கலாமில்ல. அவங்களுக்கும் கம்மியா விலை கொடுத்த திருப்தி இருக்குமில்ல.”

“நீ கெட்டிக்காரி தான். சரி அப்டியே செயுறேன்.”

119  வார்த்தைகள்

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன