பி. ஆர்.கிரிஜா/ நேர்மை !

மீனாவும் சரசுவும் தினமும் பக்கத்தில் உள்ள ஊருக்கு வந்து மீன் விற்று விட்டுத் தங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்வார்கள்.

ஒரு நாள் நினைத்த மாதிரி மீன் விற்கவில்லை. மதியத்திற்கு மேல் ஆகி விட்டது. மீன் ஒன்றும் விற்றபாடில்லை.

“சரசு, நீ அந்தப் பக்கம் போய்ப் பாரு…. நானும் இங்க போய்ப் பாக்கிறேன்…. ஒரே இடத்துல உக்காந்தா விக்காது. ” சொல்லி விட்டு மீனா நடக்க ஆரம்பித்தாள்.

  ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு நடுத்தர வயதுப் பெண் சரசுவிடம் வந்து பேரம் பேசாமல் அவளிடம் உள்ள அனைத்து மீன்களையும் வாங்கினாள். சரசுவுக்கு மயக்கமே வந்து விட்டது. இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அவள் கையில் திணித்து விட்டுச் சென்றாள்.

சரசு ஃபோனில் மீனாவை அழைத்தாள்.

மீனா வேக வேகமாகச் சரசு இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள். சரசு நடந்ததை எல்லாம் சொல்லி மீனாவிடம் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தாள். மீனா அதை வாங்க மறுத்தாள். ” ” சரசு, நீ வித்த காசு… உனக்குதான் சொந்தம்…. எனக்கு வேணாம்… அது உடம்புல ஒட்டாது” என்று சொல்லி வேகமாக நடையைக் கட்டினாள்.

சரசு பேச்சிழந்து நின்றாள். வேறு ஏதாவது விதத்தில் அவளுக்கு உதவி செய்வது என்று தீர்மானித்துத் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இப்போது அவள் மனம் லேசானது.

144 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன