விஜி ஆர் கிருஷ்ணன்/விடிவு காலம்

” என்னடி சோலை சோகமா உக்காந்திருக்கவ “

” ஏய் நாமளும் காலையிலிருந்து கூவிட்டே இருக்கோம், இந்த வெயில்ல மீனு கருவாடா போயிடும் போலயே”

” சரி சரி யாராச்சும் மொத்தமா வாங்க வந்தாலும் வரலாம், அது வரையில  கூவினு கிடப்போம்”

“இருளாயீ உன் சொல்லு பளிச்சா சரிதான்”

“என்னத்த வித்து காச கொண்டு போனாலும்

அந்தக் காச வாங்கி குடிச்சே அழிச்சிறுவான் என் புருஷன்”

“அட, விடுவியா, இந்தக் கடையெல்லாம் அடைக்கப் போறோம்னு டிவி லச்சொல்லிட்டு இருக்காய்ங்க, பொறு.”

“நமக்கு விடிவு காலம்

பொறக்கும்.”

“என்னமோ போ, பாப்போம்.”

பாதி மீன் தான் வித்துச்சு, மீதிய எடுத்துக் கிட்டு வீட்டுக்குப் போன சோலை, வழக்கம்போலத் தண்ணியடிச்சிட்டு ரோட்ல கத்திக்கிட்டு இருந்த கருப்பனை வலு கட்டாயமா வீட்டுக்குள் இழுத்துட்டு போ னா,

“ஏன்யா, உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? ஒவ்வொரு தடவையும், புயல், மழையில உசுர பணயம் வச்சிதான் கடலுக்குப் போற, நீ திரும்பக் கரைக்கு வருவியா, மாட்டியான்னு தெரியாம, நானும், உன் பிள்ளைகளும், கரையில தவிக்கிறோம், நீ கஷ்டப்பட்டு உழைச்ச காச நீயே குடிச்சி அழிக்கிறியே ! நியாயமா?”

தினமும் நடக்கிற இந்த விஷயத்த, கடல் அமைதியா பாத்துட்டு இருந்துச்சு.

127

One Comment on “விஜி ஆர் கிருஷ்ணன்/விடிவு காலம்”

  1. மீனவர் குடிகளில் வழக்கமாக நடக்கும் ஒரு காட்சி அருமையாக எதார்த்தமாக பதிவு பண்ணி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன