
பொன்னி, மகள் வள்ளியுடன் மீன் வியாபாரம் செய்து வந்தாள்.
வள்ளிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. தையல் வேலை கற்றுக் கொண்டாள்.
தினமும் மாலை படகில் மீனவர்கள் கொண்டு வரும் மீனை வாங்கிச் சென்று தெருத் தெருவாக விற்பார்கள்.
கடற்கரை ஓரமாக நடந்தனர். அப்பொழுது அலை ஏதோ ஒன்றை கரையில் ஒதுக்கியது.
வள்ளி எடுத்துப் பார்த்தாள். தோலினால் ஆன பை . திறந்து பார்த்தவள் திகைத்து நின்றாள். நிறைய பணம் நனைந்தும் நனையாமலும்.
“ஆத்தா.! நம்ம கஷ்டம் தீர்ந்தாச்சு.
உனக்குத் தையல் மெஷின் வாங்கலாம்.” என்று பொன்னி ஆனந்தத்தில் கத்தினாள்.
“என்னம்மா சொல்ற? நமக்கு வேண்டாம் மா. நம்ம போலீஸுல கொடுத்துடலாம்.”என்றாள்.
“சும்மா இரு. நாம் எடுத்துக் கிடலாம்.”
கடற்கரை ரோந்து போலீஸிடம் ஒப்படைத்தாள் வள்ளி
அதில் இருந்த வங்கி சலான் வைத்து அந்த நபரைத் தேடி பணத்தைக் கொடுத்தனர். “என் கிரேஜுவிட்டி பணம். பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்து வந்தேன். கடற்கரையில் பெரிய அலை வந்தபோது கையில் இருந்த பையை அடித்துச் சென்று விட்டது.
ரொம்ப நன்றி சார்.”
“நன்றியை இந்தப் பொண்ணுக்கு சொல்லுங்க”
வள்ளியின் செயலைப் பாராட்டி அரசாங்கம் பரிசு அளித்தது. வள்ளி தையல் இயந்திரம் வாங்கித் தைக்கத் தொடங்கினாள்.
134 வார்த்தைகள்
