சுபாஷிணி ரமணன்/மனம்

 “உச்சிக்கு வந்துருச்சு சூர்யன். இன்னும் கொண்டு வந்ததுல பாதி கூடக் காலி ஆகலையே”

சிறியனவும், பெரியவைகளுமாய் நிறைந்திருந்த மீன்கள் இருந்த கூடையை வருத்தத்துடன் பார்த்தவாறு சொன்னாள் மீனாட்சி.

“அக்கா, எனக்கொண்ணு தோணுது. சொல்லவா?”

“என்ன சொல்லப் போறே? சொல்லு வள்ளி. எப்படியாவது மீனு வித்தா சரி”

மீனாட்சியின் காதில் வள்ளி எதோ சொல்ல, மீனாட்சியின் முகம் மலர்ந்தது.இருந்தபோதும், சந்தேகமாய் “நடக்குன்றே?” என்று கேட்டாள்.

“செஞ்சு தான் பாப்போமே”என்ற வள்ளி இன்னொரு கூடையை எடுத்துப் பெரிய மீன்களையும், சிறியவைகளையும் தனித்தனியாகப் பிரித்தாள்.

இத்தனை நேரம் அருகருகே அமர்ந்திருந்தவர்கள், வேறு வேறு திசை பார்த்து அமர்ந்தார்கள்.

வருபவர்கள் இரு கூடைகளையும் மாறி மாறிப் பார்த்தார்கள்.

மீனாட்சியின் பக்கம் போனவர்களைப் பார்த்து, “இதோ, இங்கன பாருங்க, எத்தாச் சோடு மீனு! இரண்டு  வாங்கினா போதும்.” என்று வள்ளி கூப்பிட்டாள்.

வள்ளி பக்கம் வந்தவர்களை, “இதோ, குட்டி மீனுங்க ருசி அதிகம். இத வாங்கிட்டு போங்க” என்று மீனாட்சி அழைத்தாள்.

இங்குச் சிலபேரும், அங்குச் சிலபேரும் வாங்கினார்கள்.

மாலைக்குள் கணிசமாய் விற்றுப் போகக் கைகோர்த்து வீட்டுக்குப் புறப்பட்டார்கள் அக்காவும், தங்கையும்.

(வார்த்தைகள் 120)

2 Comments on “சுபாஷிணி ரமணன்/மனம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன