ஜே. செல்லம் ஜெரினா/முகமற்றவர்கள்

       அந்தஹால் சிறுசிறு கிசுகிசுப்பு முணுமுணுப்புகளுடன் மென்னொலியாய் நிரம்பியிருந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஓவியத்தின் முன்னே நின்று ரசித்தனர். சிலர் ரசித்ததை விலைக்கு வாங்கினர்.

அந்த ஆர்ட் எக்ஸிபிஷனுள்ளே அபர்ணா ஒரு சித்திரத்தின் முன்னே நின்றிருந்தாள்.அது நவினயுத்தி ஓவியம்.

பழையகாலத்து நெளிவு சுளிவுனின்றும் மாறுபட்டு வண்ணத்தூரிகையின் நீள்க்கோட்டுச்சித்திரமாய் முகங்களின்றி யூகமாய் வரையப்பட்டது.

அபர்ணா அதையே பார்த்தாள்.அவளுக்கும் இந்தப் படத்துக்கும் ஒற்றுமையிருக்கிறதோ.?

 சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டாள். இவளை யாருமே கவனிக்கவில்லை

பாதிமுகத்தை மறைக்கும் கருப்புக்கண்ணாடி.மீதி முகத்தை மறைக்கும் துப்பட்டா முழுக்கையை மறைத்த டாப். தலையில்  பெரியத் தொப்பி.

அந்தப்படம் அவளை ஈர்த்த அளவு யாரையுமே ஈர்க்கவில்லையோ. சிறிது மங்கிய வண்ணக்கலவையுடன் இரு முக்காடிட்ட பெண்கள்.எதிரே இரண்டு  கூடையில் மீன்கள். மூன்றாவதாயிருந்ததில் என்னவெனப் புரியாதபடி தீற்றியிருந்தான் சைத்திரீகன்.

காரிலேறி அமர்கையில் அந்த  ஓவியம் அவளருகிலிருந்தது.

காரின் கண்ணாடியை ஏற்றியவள் முகத்தைச் சுற்றியிருந்த துணியை நெகிழ்த்த கண்ணாடியில் அவளின் முகம் தெரிந்தது.

நானும் முகமற்றவள் நீங்களும் முகமற்றவர்கள் என்று முணுமுணுத்தபோது விரக்தியான சிரிப்பு எழுந்தது.

கார்க்கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தில்   சிதைந்த வதனத்தின் அழகின் சொச்சம் வடுக்கள் புழுக்களாய். நெளிந்தன.

119

2 Comments on “ஜே. செல்லம் ஜெரினா/முகமற்றவர்கள்”

Comments are closed.