
அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்தபோது இரவு மணி மூன்றைத் தொட்டிருந்தது. வெளியே காரிருளும் மென்மையான மௌனமும்.
பழைய நாட்களின் வடு இன்னும் மனதில்.
அம்மாவும், அக்காவும் கண் முன் வந்து சென்றனர்.15 வயதில் அவர்களைப் பார்த்தது.
நானும், அக்காவும் கருவாடு, மீன் விற்ற நாட்கள் நினைவுக்கு வந்தது. அந்த வாழ்க்கை பிடிக்காமல் தான் ராஜாவுடன் கிளம்பி வந்தேன். ராஜா கடற்கரையைப் படம் பிடிக்க வந்தவன். என் மனதை படம் பிடித்து, அதைத் திருமணமாக மாற்றிக் கொண்டவன்.
என் மனதிலிருந்த ஆசை அந்த ஓவியத்தில் வெளிப்பட, அதே இடத்திற்கு திரும்பச் சென்று பார்த்தால் என்ன? வருடங்கள் கழிந்தாலும்.
அதே மொட்டைப்பாறை. நானும், அக்காவும் உட்கார்ந்திருந்த இடத்தில் ரெண்டு சிறுமிகள் மீன், கூடையுடன்.. முகம் அக்காவின் அச்சாக.
ஓடிச் சென்று அவர்களை அணைத்துக் கொண்டேன். கையிலிருந்த ஓவியம் கீழே விழுந்தது.
நான் மட்டும் முன்னேறி விட்டேன். அவர்கள் இன்னும் அதே நிலைமையில். தவித்தேன்.
ஓடி வந்த அக்கா என்னை அணைத்துக் கொண்டாள். அவள் முகம் நான் மறந்திருந்தாலும், என் முகத்தை அவள் மறக்கவில்லை.
ஓவியத்திலிருந்த முகமற்ற சகோதரிகள் என்னை பார்த்துச் சிரித்தனர்.
(வார்த்தை எண்ணிக்கை : 128)

சிறப்பு சகோதரி