
திரைச்சீலைக்குப் பின்
கைப்பாவையை
அசைக்கும்
கலைஞனைக் காண நேர்ந்தது.
சிறுசிறு
கை அசைவுகளால்
சிதையாத கதை
பெரும் கலைச்சித்திரமாய்
திரைக்கு முன் ஒளிர்ந்தது.
அவன் விரல்களில்
மின்னிய
அந்த ஒழுங்கின் ஒளி
நட்சத்திரமென
என் வாழ்வின் வானத்திலும்
ஒளிர
எடுத்துச் செல்கிறேன்.
எல்லோருக்குள்ளும்
அகப்பட வேண்டும்
அவ்வொளி.
