
“எஸ்தரு. உனக்கொரு விஷயம் தெரியுமா?
“என்ன.க்கா?”
“அதோ புதுசா கட்டுறாங்க பாரு ஒரு பில்டிங்கு. அது மீன் மார்க்கெட்டுக்குக்காம்.. அடுத்த மாசமெல்லாம் அங்கே தான் விக்கணுமாம். “
“இங்கே வித்தா. என்ன?”
“ம்ம். இந்த ரோடெல்லாம் நாறுதாம்”
“சரி. அப்ப நாமும் அங்கே போய்டுவோம்”
“போடி. விவரம் கெட்டவளே. அங்கே கடை பிடிக்க முதல்ல அட்வான்ஸ் குடுக்கணும். மாசாமாசம் வாடகை குடுக்கணும். அம்புட்டு காசு யாரு கிட்ட இருக்கு?”
“பிறகு நாம என்ன செய்றது?”
“ஒரு வாரம், பத்து நாளு வெளியே எங்கேயாவது போயி வித்துட்டு வரலாம். அப்புறம் ஒவ்வொரு ஆளா இதே மாதிரி மறுபடி இங்கே கடை போடுவாங்க. அப்ப நாமளும் சேந்துக்கலாம்.”
“யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்களா?”
“அப்பப்ப மாமூலு கேட்டு வர்றவங்களுக்கு மட்டும் கொஞ்சம் காசு கொடுத்தா போதும்”
சட்டங்கள் கடைக்கோடி மனிதர்களைத் திருப்தி செய்யாதவரையில் விதிமீறல்களும், கையூட்டுகளும் இருக்கத் தானே செய்கின்றன?
மொத்த வார்த்தைகள்: 102
