
“ரோஸி, இன்னும் கொஞ்சம் ரைட்ல திரும்பி உட்கார். ராணி நீ தலையைக் கொஞ்சம் திருப்பு,” என டைரக்டர் சொன்னார். ரோஸி ராணி இருவரும், “இதான் இந்த விளம்பர மாடலாக இருந்தாலே தொல்லை தான் .நல்ல பேமெண்ட் கிடையாது. ஏதோ ஒரு படத்தில் நடிச்சு நல்லா செட்டில் ஆகிவிடலாம். அப்புறம் உலகம் நம்மைச் சூப்பர் ஸ்டாரெனக் கொண்டாடும்,” என இருவரும் புலம்பினர். ரோஸி டைரக்டரிடம், “சார் இன்றோடு 15 நாள் கால்ஷீட் முடிந்தது,” என்றாள். டைரக்டர், “ஏம்மா நீ முளைச்சு மூணு இல விடல, அதுக்குள்ளேயே அலட்டலா?” என்றார்.
திடீரென முகத்தில் தண்ணீர் பட, விழித்தால் எதிரே அவள் அம்மா, ““எழுந்துருடி காலையிலேயே 8 மணிக்கு என்ன பகல் கனவு ? வேலைக்குப் போறியா?” என்றாள். ரோஸி தன் கனவுக் கலையை அன்றைய ஓட்டத்திற்கு தயாரானாள்.
93
