கௌரி சங்கர்/கூடை மீன்கள்

மீன் பிடி துறைமுகம் ஜெ ஜெ என்று இருந்தது. மீன் வாங்குபவர்களும், விற்பவர்களும் நடமாடிக்கொண்டு இருந்தனர்.வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. விடிகாலை ஐந்து மணிக்கு வந்து கடற்கரை மணலில் கூடைகளுடன் அமர்ந்து இருந்தனர் காதரினும், சரோபியும்.

காதரின் சொன்னாள் – “இன்னும் மூன்று மணி நேரம் தான் பார்க்கணும். கிடைக்கிற காசுக்கு மீன்களை விற்று விட்டு, கிளம்பனும். மழை வர்றமாதிரி இருக்குது. கிடைச்ச மட்டும் போதும்.”

சரொபி சொன்னாள் – “இதுல இவ்வளவு குறியா இருக்குற நீ, உன் கல்யாண விசயத்துல சொதப்பிக்கிட்டு இருக்கியே?”

“என்னடி சொல்றே நீ ?”

“கல்யாணம் காலத்துல செஞ்சிடனும். என்னோட அண்ணன் உன்னைத்தான் கட்டணும்னு பிடிவாதமாக இருக்கிறான். நீ என்னதாண்டி நினைச்சுகிட்டு இருக்கே ?”

“அவருக்கு வருமானம் சரியில்லேயே ?”

“பாரு. இந்நெய்க்கு நமக்கு வருமானம் வருமான்னு சந்தேகமா இருக்குது. சம்பாத்தியம் கூடும், குறையும். உன்னை ஒருத்தன் விரும்புகிறான் அப்படின்னு தெரிஞ்சா, அவன் உன்னைக் காலத்துக்கும் வச்சி காப்பாத்துவான் அப்படின்னு நம்பினா, என்க அண்ணனுக்குக் கழுத்தை நீட்டு.”

‘மீன்களின் ஆயுள் எவ்வளவு என்று அவைகளுக்கு தெரியாது; காலத்தோடு ஒத்து வாழ்வதே சரி,’ என்று தோன்றவும் காதரின் சரி என்று புன்முறுவல் பூத்தாள்.

(125 words)

One Comment on “கௌரி சங்கர்/கூடை மீன்கள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன