எஸ். எல். நாணு/நடிகை

“வாங்க. வாங்க. சுவையான மீனு வாங்கிக்கினுபோய் வூட்டுல கொயம்பாக்கி ருசியா சோறு துண்ணுங்க. ராமரு பாலம் கட்டச்சொல்ல அணிலுக்கு மட்டும் ஆசி கொடுக்கலை. கடல்ல இருந்த மீனுகளுக்கும் ஆசி கொடுத்தாரு. ஆசி கிடைச்ச அந்த வம்சத்துல வந்த மீனுங்க இது. வாங்கிகினு போங்க”

“கட்” டைரக்டர் கத்தினார்.

“மணிமாலா. சூப்பர்மா.”

ஆனால் கேமராமேன் இன்னொரு டேக் கேட்டார்.

“ஓவர் லைட்டிங். டேய் அந்தப் பேபிக்கு கட்டர் போடுங்கப்பா”

மறுபடியும் இன்னொரு டேக்.

“சார். அவங்க டைலாக் பேசும்போது கூட இருந்தவங்க கேமராவைப் பார்த்துட்டாங்க. ஒன் மோர் போயிரலாம்.”

இந்த முறை கேமரா பீல்டில் யாரோ நடந்து போகவே மீண்டும் ஒரு டேக்.

இப்படியே போய் ஒன்பதாவது டேக்கில் ஷாட் ஓக்கே ஆனது.

”சூப்பர். ஒவ்வொரு டேக்குலயும் வசனத்தை இம்ப்ரவைஸ் பண்ணிட்டே இருந்தா மணிமாலா. ப்ரில்லியண்ட் ஆக்ட்ரஸ்”

டைரக்டர் சொன்னதும் அவளுடன் இருந்த நடிகை.

“சார். அவங்க சுத்த சைவம். இந்த மீன் வாடையை சகிச்சுக்கிட்டு அதை முகத்துல காட்டாம ஒம்பது டேக் நடிச்சிட்டு அங்கபோய் வாந்தி எடுக்கறாங்க பாருங்க.. நிஜமாவே அருமையான நடிகைதான்.

118

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன