வனஜா முத்துகிருஷ்ணன்/கடற்கரை மகள்கள்

“ஏட்டி மஞ்சு. ஏன் முகத்தை உம்னு வச்சுகினு கீர? இன்னிக்கு மீன்பாடு எப்படி?”

“வலை நல்லாத்தான் இருந்துச்சு ஆத்தா.எல்லா மீனுங்களும் சிக்கிச்சு. ஆனா அல்லா மீனும் விக்காம அப்படியே இருக்குது.”

“என்ன ஆச்சுடி? என்ற மீனாவிடம்,

“ஆத்தா… இன்னிக்கு ஆடித் திருவிழா. நெறய பேரு அம்மனுக்குக் கூழ் ஊத்தறாங்களாம்.  அசைவத்தைத் தொட மாட்டாங்களாம். மீனுங்க கெடச்சா வாங்க ஆளைக் காணோம்.”

“க்கும். சோகப்படாதே கண்ணு. நம்ம வாழ வழி காட்டிய கடல் அன்னை நம்ம கஷ்டப்பட்டு புடிச்ச மீனுங்களும் விக்க வழி காட்டுவா. எந்திரி.இப்படியே குந்திகினு இருக்காம இதுங்கள விக்க வேற ஏதாவது வழி கீதான்னு பாக்கலாம். நம்பிக்கதான்டி வாழ்க்கை.”

 “ஆம்பிளங்க இல்லாத வூட்டுல நம்ம பசங்களைக் காப்பாத்தி படிக்க வைக்க நான் வலை வீசினாத்தான் கைல துட்டு. பொம்பளைங்களும் வலை வீசிச் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டோம் ,” என்று உதட்டில் புன்னகையுடன் வலையைக் கையில் எடுத்தாள் மஞ்சு.

கண்ணீரில் நனைந்த கண்கள் அவள் சிரிப்பின் பின் மறைந்திருந்த வலியைக் காட்டியது நிஜம்.

(112 வார்த்தைகள் )

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன