
கூடைகளைக் கீழே இறக்கி வைத்துவிட்டு புடவை முந்தானையைக் கொண்டு முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டனர் முனியம்மாவும், செல்வியும்.
ஊம், இந்தப் புரட்டாசி வந்தாலும் வந்துது, நம்ம பொழைப்பு தெருத் தெருவாச் சுத்தியும் லாட்டரி அடிக்குதே!, ஓய்வாக உட்கார்ந்தவாறே புலம்பித் தீர்த்தனர் இருவரும்.
கூடையில் ஒரே சொல் சலசலப்பு.
ஏ, மீனே இந்த மாசத்துல மட்டும் நம்மள யாரும் சீந்த மாட்டேங்கறாங்களே! எதுனாலன்னு உனக்குத் தெரியுமா, அருகிலிருந்த கூடையில் வீற்றிருந்த கருவாடு கேட்டது.
இது பெருமாளுக்கு உரிய மாசமாம். அசைவப் பிரியர்கள் விரதமிருப்பாங்களாம்.
அந்தப் பெருமாளோட பத்து அவதாரங்களில் முதலே நம்ம இனம்தான். அப்புறம் ஏன் நாம் மட்டும் வேணாமாம்.
ஊம், வர வர மனுசாளை மட்டுமில்லை கடவு ளையுமே புரிஞ்சுக்க முடியல.
தங்கள் முதலாளிகள் கூடைகளைத் தூக்க, கப்சிப் ஆயின் மீனும், கருவாடும்.
88 words
