
செம்பருத்தியும் , பொன்னியும் கடற்கரையில் அப்பாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். நீண்ட நேர அமைதிக்குப் பின் பொன்னி, செம்பருத்தியிடம் “ஏன் நீ சோகமாக இருக்க? ஒன்னும் பேச மாட்டேங்குற. என்ன ஆச்சு?” என்றாள்.
அதற்குச் செம்பருத்தி அக்கா, “நீயும் நானும் தினமும் இங்கே வந்து காத்திருப்போம். அப்பாவும் கடலிலிருந்து மீன் பிடித்துக் கொண்டு வருவாரு. அத நாம வித்திட்டு வீட்டுக்குப் போய்ச் சோறாக்கி சாப்பிடுவோம்.அம்மா இல்லாத கஷ்டமே எனக்குத் தெரியல. நீ என்ன அப்படி அம்மா மாதிரி பார்த்துகிட்டே. ஆனா, அடுத்த மாசம் உனக்குக் கல்யாணம். அப்புறம் நீ வேற ஊருக்குப் போயிடுவ. நான் தனியா தான் இருக்கணும் அதை நினைச்சா தான் எனக்கு வருத்தமா இருக்கு, “என்றாள் செம்பருத்தி.
“இதுக்கா நீ கவலைப்படுற, மாப்பிள்ளைக்கு அந்த ஊர்ல வியாபாரம் சரியாக நடக்கலையாம். அதனால கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம அப்பா கூடச் சேர்ந்து இங்க வந்து மீன் பிடிக்கிற தொழிலையே செய்யறேன்னு அப்பாகிட்ட சொல்லிட்டாராம். அப்பாவும் சரின்னுட்டாராம். அதோட இன்னொரு சந்தோஷமான விஷயத்தையும் அப்பா வந்து உன்கிட்ட சொல்லுவாரு பாரு. அத கேட்டதும் இன்னும் நீ சந்தோஷமாயிடுவ சரியா,” என்றாள் பொன்னி.
சந்தோஷமான விஷயமா! என்னவாக இருக்கும்? என. யோசிக்க ஆரம்பித்தாள் செம்பருத்தி.
136
