எம் ஷங்கர் /மீன் மைன்ட்

“ கூடை நிறைய மீன வச்சுட்டு கூவரோம். ஒராளுகூட வாங்க மாட்டேங்காக”

“ இன்னிக்கு முளிச்ச முளி.அது சரி ஒன்னோட அண்ணன் பொண்ணு வந்துருக்குன்ட்டு சொன்னியே. என்ன பண்ணுது?”

“ஆமா அது  சொம்மா போனை நோண்டிட்டுயிருக்கு. அட அதுவே வருதே?”

“என்ன அயித்தே மீனு ஒன்னும் விக்கலையா?  ஒரு ஐடியா பண்றேன்” என்று சொல்லி அவங்கள மீனோட ஒரு ஃபோட்டோ எடுத்து “இன்னும் ஒன் அவர்ல பாரு. கூட்டம் வரும்” என்று சொல்லிப் போய்விட்டாள்.

 சொன்னதுபோலவே கூட்டம் வந்து அரை மணியில் கூடை மீனும் காலி. வீட்டுக்குப் போனதும், “அடியே என்ன மாய மந்திரம் பண்ணின? கூடை மீனும் வித்துப் போச்சே,” என்றவளிடம் தன் ஃபோனை காண்பித்தாள். அதில் பிரபல நடிகர் இவளிடமிருந்து மீன் வாங்குவதுபோல் ஒரு படம்.

“அடி ஆத்தி இவர் எப்ப எங்கிட்ட மீன் வாங்கினாரு  தப்பில்லையா?”

“அடப்போ அயித்தே நாட்ல இதப்போலப் பெரிய பெரிய விஷயங்க நடக்குது. இந்த மீன விக்கறதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.”

 “என்ன இருந்தாலும் படிச்சவ படித்சவதான்,” என்று வியந்தாள் அத்தை.

 120 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன