சசிகலா விஸ்வநாதன்/மீன் வியாபாரம்

“ஏசப்பா! இன்று எப்படியாவது எல்லா மீனும் வித்துப் போவணும். கடலம்மா கைக்கொடுக்கணும். இன்று எம்பொண்ணு மரியத்துக்கு, பொறந்த நாள். மேலாக்கு போட்டு வான்னு, சேக்காளி பொண்ணுங்க சொல்லுதாங்க; ஒரு  தாவணி வேணும்னு, கேட்டுட்டே தான் இருக்கா.? வெச்சுக்கிட்டா கைநீட்டாம இருக்கேன். இல்லாத கொடுமைதானே!” என்று ரோசம்மா, தேவனை வேண்டினாள்.

திடீரெனக் காரிலிருந்து ஒரு சீமாட்டி இறங்கினாள்.வந்தவ, ப்ளாஸ்டிக் கவர் ஒண்ணை  மரியத்தின் கைல கொடுத்து, “எம்பொண்ணு ஜெபமணியின்ஃப்ரண்டுதானே நீ! இன்னிக்கு உனக்குப் பொறந்த நாளாமே! உனக்குப் புது உடுப்பு எடுத்துத் தரச்சொல்லி ஃபோன் பண்ணினா! இந்தான்னு, கொடுத்தாள்.

ரோசம்மாவுக்கு மனம் நெறஞ்சுதான் போச்சு. ஆனாலும், வியாபாரத்தை விட மனம் இல்லாமல், “மீனு வாங்கலையாம்மா;” என்றதும், “கண்டிப்பா வாங்கறேன்னு சொல்லி, வெலெயே பேசாமா  அத்தனை மீனையும் கூடையோடு எடுத்துக்கிட்டு, எத்தனை கொடுக்க; என்று கேட்டதுக்கு, ரோசம்மா, பதில் சொல்ல முடியாமல் திணறினாள். ”கொடுக்கறதைக் கொடுங்கம்மா.உங்க கிட்ட நான் பேரமா பேசப் போறேன்.”என்றாள்

ரெண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை, ரோசம்மா கையில் திணித்த ஜெபாவின் அம்மா,  மரியத்தைப் பார்த்து, பாவாடை தாவணி ரவிக்கை கலர் பிடிச்சுருக்கா;”என்று கண் சிமிட்டிச் சென்றாள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன