ஹரணி தஞ்சாவூர்/சுதந்திர தின என்பா

(1)
உண்மை பேசி உழைப்பு காட்டு
கண்ணிமை போலக் கண்ணியம் கொள்
உள்ளதில் நிறைவு கண்டு மகிழ்
சுதந்திரம் நன்றாய்ப் பேணு.

(2)
பெருமை பேசாது எளிமை பழகு
கருணை கொண்டு காரியம் செய்
அருமை அறிந்து ஆற்றல் உணர்த்து
சுதந்திரம் நன்றாய்ப் பேணு.

(3)
வியர்க்க வினை செய்க என்றும்
தயக்கம் இன்றித் தயை கொள்
மயக்கம் இல்லா மனம் பழகு
சுதந்திரம் நன்றாய்ப் பேணு.

(4)
கைப்பேசி நேரம் குறை கண்ணால்
தேடிப் படித்தே சிந்தனை செய்
கூடிடும் சொந்தம் குற்றம் தவிர்
சுதந்திரம் நன்றாய்ப் பேணு.

(5)
நாட்டைப் போற்றி நலமாய்ச் சொல்
வீட்டைப் போல நாட்டை நினை.
நல்ல பிள்ளை நாடு காக்கும்
சுதந்திரம் நன்றாய்ப் பேணு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன