
நகரத்தின் பழைய புத்தகக் கடையின் வாசலில் போய் நின்றாள் அவள். வாசல் முழுவதும் புத்தகங்களால் கட்டப்பட்டிருந்தது.
“என்ன புத்தகம் தேடுறீங்க?” கடைக்காரரின் குரல்.
“ஒரு புத்தகம்… பெயர் தெரியாது.”
“அப்படின்னா கதையைச் சொல்லுங்க.” அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
“ஒரு பெண்… பல வருடங்களுக்கு முன்பு தொலைத்த அப்பாவைத் தேடுகிறாள். அவள் அவரைக் கண்டுபிடிக்கிறாளா இல்லையா தெரியாது.”
கடைக்காரர் உள்ளே சென்றார்.
தூசி படிந்த ஒரு பழைய புத்தகத்தை எடுத்து வந்தார்.
அவள் புத்தகத்தைத் திறந்தாள். முதல் பக்கத்தில் ஒரே ஒரு வரி இருந்தது. “நீ என்னைத் தேடிக்கொண்டிருக்கிறாய் என்றால், இந்தப் புத்தகம் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டது.”
அவளுடைய , இருபது வருடங்களுக்கு முன்பு காணாமல் போன அப்பாவின் கையெழுத்து.
கடைக்காரர் மெதுவாகச் சொன்னார்:
“இந்தக் கடைக்கு அவர் ஒவ்வொரு வருடமும் வந்து, ஒரு புத்தகம் விட்டுச் செல்வார். ‘என் மகள் ஒருநாள் இதைத் தேடி வருவாள்’ன்னு சொல்லுவார்.”
அவள் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள்.
“அப்பா… இப்போ எங்கே?”
கடைக்காரர் சிரித்தார். “அதைத் தெரிஞ்சுக்க அடுத்த புத்தகத்தைத் திறக்கணும்.”
பல வருடங்களாக மூடியிருந்த கதவு. அன்று, புத்தகங்களால் கட்டப்பட்ட அந்த வாசலால் திறந்தது.
(129 வார்த்தைகள்)
