சசிகலா விஸ்வநாதன்/நூலகமாகிய இல்லம்

தாத்தா சோமேசனின் அந்திம சடங்குகளுக்காக இந்தியா வந்திருந்தான்; அதிரன். மயிலாடுதுறையில், இருந்த, அந்தப் பெரிய வீடு  பழைய புத்தகங்களினாலும், செப்பு பட்டயங்களினாலும், ஓலை சுவடிகளாலும், நிரம்பி வழிந்தது. 

வயது முதிர்ந்த தந்தை  திருநாவுக்கரசை தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்த நிலையில், வீட்டை விற்க முனைந்தான். நூறு வருடம் பழைய வீடானாலும்  கல் கோட்டை போல் உறுதியாய் நின்ற அந்தப் பெரிய வீட்டைக் கிரயம் பேசுபவர்கள் அனைவரும்,  காலி வீட்டையே கிரயம் பேசினர்

இத்தனை பண்டைய தமிழ் புத்தகங்களையும், வரலாற்று சிறப்புமிக்க  தமிழ் செப்பு பட்டயங்களையும், தமிழ் பிராம்மி எழுத்தில் அமைந்திருந்த ஓலை சுவடிகளையும், என்ன ,செய்வது, என்ற பிரச்சனை கண் முன்னே நின்றது.

இங்குள்ள அதிகாரவர்க்கத்தின் தேவையற்ற விதிமுறைகளினாலும், மெத்தனத்தால் விளையும் காலதாமதத்தாலும் மனம் நொந்த அதிரன், திடீரென்று வந்த யோசனையில், பிரான்சின் பழமையான தமிழ் அமைப்பான பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் மேலாளருடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தான்.

அந்த வீட்டைப் புதுப்பித்து, ‘சோமேசன்-திருநாவுக்கரசன் நூல் நிலையம்’ என்ற பெயரில்ஃப்ரான்ஸ் தமிழ் சங்கத்திற்கு அதன் உரிமையையும், பராமரிப்பையும் சட்டபூர்வமாக அளித்துவிட்டு, மன நிறைவுடன்   தந்தையுடன் லண்டன் திரும்பினான்.

122

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன