
இது என்னுடைய கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு நகரத்து நூல் நிலையம் .ஒரு மாதமாக என் மனைவியின் அன்புத் தொல்லை. இப்பொழுது எனக்கு எழுபது வயது. அவளுக்கு 60 வயது. அவள் 10th படிக்கும்பொழுது முத்தாரத்தில் எழுதிய ஒரு துணுக்கு வெளியாகி உள்ளதாம். இன்றைக்கு கணக்கெடுத்துப் பார்த்தால் ஏறத்தாழ 45 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்துள்ளது. இந்த நூல் நிலையத்தில் அந்தப் புத்தகம் உள்ளதாக அவளுடைய நண்பர் ஒருவர் அவளிடம் சொல்லி விட்டார். என்னைத் தேடிப் பார்த்துக் கொண்டவரச் சொல்லி இருக்கிறாள் என் மனைவி. நான் இன்று 20வது நாளாக வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் சுமார் ஆயிரம் புத்தகங்களையாவது பார்த்திருப்பேன் ஆனால் அதை மட்டும் காணவில்லை. அட்டை படத்தில் ஒரு பிரபல திரைப்பட நடிகையின் பெயரைச் சொல்லி அவளின் புகைப்படம் இருக்கும் என்று சொல்லி இருக்கிறாள். நான் ‘எங்கே அவள்?’ என்று அந்த நடிகையைத் தேடிக் கொண்டிருக்கின்றேன். இன்றாவது கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. நம்புவோம். காலையில் வந்தால் மாலைவரை எனக்கு இதுதான் வேலை. கிடைத்தால் அதுதான் எனக்கு நல்ல நேரம்.
119
