ருக்மணி வெங்கட்ராமன்/மாற்றியது யாரோ?

பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான் கண்ணன்.

திடீரென மழை பெய்யத் தொடங்கியது.  கண்ணன் மழைக்காக ஒரு கடையில் ஒதுங்கினான்.

அது ஒரு பழைய புத்தகக் கடை.

புத்தகங்களே தோரணமாகத் தொங்கியது. ‘இதுவரை இந்தக் கட்டிடத்தைப் பார்த்தது இல்லையே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அங்கிருந்த காப்பாளர் “தம்பி! மழை நிற்கும் வரை புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிரு.”

“எனக்குப் படிக்க வேண்டாம். நான் சிறிது நேரத்தில் கிளம்பி விடுவேன்.”

மழை அதிகமாகப் பெய்ய ஆரம்பித்தது.

உள்ளே சென்று ஒரு புத்தகங்களைப் பார்க்கத் தொடங்கினான்.

அவர் ஒரு புத்தகத்துடன் வந்தார்.

“தம்பி! இந்தப் புத்தகத்தைப் படி.”

புத்தகம் பார்க்கும் பொழுதே அவனைப் படிக்கத் தூண்டியது.

எடுத்துப் படிக்கத் தொடங்கினான். அது ஒரு சிறுவனின் கதை. படிக்கப் படிக்கக் கீழே வைக்கவில்லை. முடிவுவரை படித்தான்.

அப்படியே அவனுடைய கதை. மற்ற குழந்தைகளைத் துன்புறுத்துவது , அம்மாவிடம் காசு வாங்கி செலவிடுவதையும் கதையாகச் சொன்னார் கதாசிரியர். அவன் வாழ்க்கை எப்படி திசை மாறியது என்பதே கதை. அந்தப் பையனின் முடிவு அவனைச் சிந்திக்க வைத்தது.

சிந்திக்க ஆரம்பித்த கண்ணனின் வாழ்க்கை அன்றிலிருந்து ஆரம்பம்.

126

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன