ஜே. செல்லம் ஜெரினா/ஊர்கூடித் தேர் இழுக்க!

 புத்தகங்கள்… புத்தகங்கள்.கண்ணில் பட்டதெல்லாமே புத்தகங்கள்.அபூர்வாவின் கைகள் நூல்களை வாஞ்சையோடு தடவின.

ஒரு பெரியகூடத்தில் சுவரோரமிருந்த அலமாரிகள் போதாமல் நிலைப்படியில் அடுக்கியதே ஆர்ச்போல நிற்கும். முன்னே சிறு அரைவட்ட இடம் குறிப்புகள் எடுக்கக் கொள்ள.எந்த நூலைக்கேட்டாலும் தடுமாறாமல் தாத்தா எடுத்துத் தருவார்.

 தாத்தாவின் ஒரே சொத்து. கடைசி காலம்வரை தாத்தா இவர்களோடு தானிருந்தார்.தவறுதவறு உறங்கும் நேரம் தவிர இவைகளோடுதானிருந்தார்.

தாத்தாவின் மகள் வயிற்றுப்பேரன் பாதி தன்னுடையதென வழக்கு போட்டுள்ளான்.

அத்தனை புத்தகங்களையும் என்ன செய்வது? இவளிடம் பணவசதியுமில்லையே!

இதை ஒரு யூட்யூபர் செய்தியாக வழங்கிவிட பற்றிக் கொண்டது. யாரோ ஒருவன்  ஊர்கூடித் தேரிழுக்கலாமேயென ஐந்தாயிரம் ரூபாயை நூலகத்துப் பேரில் கணக்குத்துவங்கி போட்டான். அடுத்தடுத்து தேவைக்கு மேலாகப் பணம் வந்ததுமே அவளே அந்தச் சேனலை அழைத்துக் கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டு  நன்றியைக் காணிக்கையாக்கினாள்.இனி பணம் அனுப்ப வேண்டாம் என்றாள்.

தாத்தாவின் மூச்சுக்காற்றும் வெதுவெதுப்பான ஸ்பரிசமும் அங்கே உலவுவதாக உணர்ந்தாள்.

“நியாயமானநோக்கத்துக்கு  பிரபஞ்சமே துணை செய்யும் என்பதை இந்த நீதி மன்றம் கண்கூடாகப் பார்த்து விட்டது” என்று  நீதிபதி  வழக்கை முடித்தார்.

கண்ணீர்மல்க வெளியேறினாள் அபூர்வா.           

122

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன