
‘சப் டெ பப்’ பாரிஸ் நகரின் ஒரு பெயர் பெற்ற கம்யூனிகேஷன் & அட்வர்டைசிங் ஸ்கூல்ல ஒரு நூலகம் நான். ஜீன் ஆன்ட்ரே என் பிதா எவ்வளவு ஆசையா கட்டினார். இதில் கிடைக்காத புஸ்தகங்களே இல்லையென அமைக்கப் போறேன்னாரே?
உலகெங்கும் இருந்து அரிய புஸ்தகங்களை தேடி இங்கு வருவர் எனச் சொல்வாரே.
இப்ப என் நிலையைப் பாருங்கள்.எங்களைக் கவனிக்க ஆளில்லை. இதோ ஒரு ஆள் பிரென்ச்காரன் போலதான் தெரிகிறது, நூலகர் கிட்ட செல்கிறான். “என்ன இது நூலகமா, குப்பை புஸ்தகமா கிடக்குதே ஒரு பிளேபாய், கிளாமர் கேர்ல் இருக்கா எப்படி பசங்க உள்ளே வருவாங்க கவர்ச்சியா ஒரு புஸ்தகம் இருக்குதா. இந்தக் குப்பையைத் தூக்கி எறி. கவர்ச்சியான புஸ்தகங்களை அடுக்கு.”
“சார் இது அட்வர்டைசிங் கம்யூனிகேஷன் புக்ஸ்கான நூலகம், பை த வே நீங்கதான் புது அட்மின் ஆபீசரா?”
“ஆமாம் அதுதான் சொல்றேன் கவர்ச்சி இல்லாத விளம்பரம் எடுபடுமா, குப்பைகளைத் தூக்கி எறி.சொல்லிக் கொண்டே ஒரு பழைய புஸ்தகத்தை எடுத்து எறிந்தார்.
நான் வெறும் கட்டிடம் இப்ப ’ஜீன் ஆண்ட்ரே’ சுவற்றில் ஒரு மர ஃபிரேமுக்குள் இருந்து புன்னகைக்கிறார் அவர் மட்டும் என்ன செய்ய முடியும்.
119
