சசிகலா விஸ்வநாதன்/விதியின் வழி எதுவோ

(1)

அங்கிருந்து மீண்டும் நான் வந்தாயிற்று
இங்கிருந்து மீளவும் அங்கே போகும் நாளை,
இன்றிலிருந்தே நான் எதிர்பார்த்து இருக்கிறேன்.
விதியின் வழி எதுவோ!

(2)

இல்லம் வந்ததும் நன்றாக இருந்தது.
என்னை அந்தச் சுவர்கள் அணைத்துச்
சொன்னது; என்னை விட்டுப் போகாததே.
விதியின் வழி எதுவோ!

(3)

எங்கள் வாசனையால் நிரம்பிய வீடு!
எங்களுக்கு என்றே ஏற்பட்ட சொர்க்கம்!
இன்னும் எங்களுக்கு எத்தனை நாள்களோ!
விதியின் வழி எதுவோ!

(4)

இல்லம் வந்ததும் ஏகமாக வேலை கள்.
எதை எப்படி செய்வதென்றே புரியவில்லை.
ஒன்றும் செய்திடாமல் நாங்கள் அமர;
விதியின் வழி எதுவோ

(5)

பகல் முழுவதும் நாங்கள் உறங்கி,
இரவு முழுவதும் விழித்தே இருக்கிறோம்.
இன்னும் நேரம் நேர் ஆகவில்லை!
விதியின் வழி எதுவோ!

(6)

வங்கி கணக்கு வழக்கு பார்க்கவா?
வாக்காளர் அட்டைக்கு நான் ஓடவா?
சமையல் வாயு அலுவலகம் போகவா?
விதியின் வழி எதுவோ!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன