அலைபேசிக்கு உண்டு அறம்/அழகியசிங்கர்

1.

எப்போதும் கட்டி அழுகிறேன் அலைபேசியை.
கையில் கிடைக்காமல்
போய்விட்டால் அவ்வளவுதான்.
பொழுதே இல்லாமல்
போய்விடும் அன்று

அலைபேசிக்கு உண்டு அறம்

2.

வீட்டிற்கு எதாவது
வாங்கிக் கொண்டு
வர உபயோகம் உண்டு அலைபேசிக்கு
தூரத்தில் இருப்பவரைப்
பக்கத்தில் கூப்பிட

அலைபேசிக்கு உண்டு அறம்.

3.

ஒரு இடம் போக
வர
நினைத்த மாத்திரத்தில்
பணத்தை கைமாற்ற
உண்டு உண்டு
அலைபேசியின் இடம்

அலைபேசிக்கு உண்டு அறம்

4.

என்பாவின் ஈற்றடி
யோசித்துக் கொண்டிருக்கும்போது
தந்தார் ஈற்றடியை
தஞ்சாவூர் ஹரணி
எனக்கும் ஈற்றடிப்
பிடித்து இருந்தது

அலைபேசிக்கு உண்டு அறம்

5.

எங்கும் பார்த்தாலும்
சுற்றிலும் அலைபேசி
புகை வண்டியில்
பயணம் செய்பவர்
யாருடனும் பேசுவதில்லை
கையில் அலைபேசி

அலைபேசிக்கு உண்டு அறம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன