தி.வள்ளி/ பொக்கிஷம்

“அந்தப் பாழடைஞ்ச ஜமீன் பங்களா நமக்கு எதுக்கு? உங்க அண்ணனுக்குக் கொடுத்துடுங்களேன்.”

“கனகா நீ பேசாம இரு,” அதட்டினான் நகுலன்.

அப்பா இறக்கும்போது, “நகுலா பங்களாவுக்கு கீழே பொக்கிஷம் இருக்குன்னு உங்க தாத்தா சொல்லியிருக்கார்,” என்றாரே.

கேஸ் ஜெயிச்சு பங்களாவும் பொக்கிஷமும் தனக்கே வர வேண்டும்.

தீர்ப்பு அவன் பக்கம் வர, குடும்பமே குதுகலித்தது.

பங்களாவின் சாவி கைக்கு வர, அவசரமாகக் கீழே இருந்த பாதாள நிலவறையை திறந்தான்.

அத்தனையும் அரிய புத்தகங்கள். உள்ளே ஒரு நூலகமே இருந்தது.

ஏமாற்றத்தில் அவன் முகம் வாடிப்போனது. ஆனால் அருகில் இருந்த அவன் மகள் குதுகலித்தாள்.

“அப்பா அரிய புத்தகங்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அரிய பொக்கிஷம். தாத்தாவோட அப்பா ஃப்ரென்ஞ் கவர்மெண்ட்ல இந்த லைப்ரரிக்கு இன்சார்ஜ்ஜா இருந்திருக்காரு.. இதோ பாருங்க ஆவணம்.”

டக்கென்று பொறி தட்டியது நகலனுக்கு. இதைத்தான் பொக்கிஷமென்று அப்பா சொல்லியிருப்பாரா.

ஆனால் படித்த மகனுக்கோ பிரெஞ்சு அரசாங்கம் இதைப் பெரிய விலைக்கு வாங்கி நினைவுச் சின்னமாக மாற்றி விடக்கூடும் என்ற எண்ணம் வர, “மிகப்பெரிய பொக்கிஷம்தான்” என்றான் சந்தோஷத்தோடு.

மூன்று பேரும் மூன்று கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

122

One Comment on “தி.வள்ளி/ பொக்கிஷம்”

Comments are closed.