வி.பிரபாவதி/புத்தகக் குவியல்கள்

கோபாலன் சேர்த்து வைத்துள்ளப் புத்தகங்கள்.  அத்தனையும் தான் படித்தது என்கிறார்.  இருந்தாலும் இருக்கலாம்.  ஆம்.  அவரிடம் அரை மணி பேசினால் போதும்.  ஆயிரக்கணக்கான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

விஷ்ணுவிற்கு எப்படியாவது அந்தப் புத்தகம் இவரிடம் உள்ளதா என்று தெரிந்தாக வேண்டும்.  இருக்கு என்று சொன்னாலும் தேடியாகனுமே!

தலை சுற்றியது.  இருந்தாலும் தீசிஸ் எழுதக் கட்டாயம் வேண்டும்.  தேடலானான்.  “என்ன புத்தகம் தேடறப்பா” வயதானாலும் வார்த்தைகளில் தெளிவு.

“அதான் மாமா அந்தப்……புத்தகம்.  நேத்திக்கு சொன்னேனே”

“அதுவா உள்ள அலமாரில மூணாவது தட்டுல நடுவுல பாரு”

புத்தகம் இருந்தது.  “அங்கியே ஒரு புஸ்தகம் இருக்கு பாரு. அதுல கையெழுத்துப் போட்டுட்டு எடுத்துண்டு போ”.

அது அவரே தைத்து வைத்துள்ள ஒரு நோட்டுப் புத்தகம்.

ஒருவாரம் கழித்து திருப்பிக் குடுக்கும்போது மாமாவே அதே இடத்தில் வைத்துக் கொண்டார்.  வாசிப்பை நேசிப்பவர்!

அடிக்கடி விஷ்ணுவின் பேரைச் சொல்லிக் கொண்டு நிறைய மாணவர்கள் கோபாலன் மாமாவைத் தேடி வந்து புத்தகம் பெற்று சென்றார்கள்.  நாம் வைத்திருக்கும் விதமே அந்தப் புத்தகத்தின் மதிப்பைக் கூட்டும் என்பது திண்ணம்.

114

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன