ஸ்ரீராம் /ரசனை கெட்டவர்கள்

சாவியை வாங்கிக் கொண்டு சுத்தம் செய்ய உள்ளே வந்த சொர்ணாவுக்கு அந்த இடத்தைப் பார்த்ததுமே ‘சொரேர்’ என்றது. 

இந்த அடைசலில் எங்கோ 3 தங்கச்சாவிகள் இருக்கின்றதாம்.  அதைத் தேடி எடுக்க வேண்டுமாம்.

அலங்கார வளைவுபோல அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்ததும் ‘சுர்’ என்று கோபம் வந்தது.

‘இவர்களெல்லாம் படிப்பதற்கு புத்தகம் வாங்குகிறார்களா இல்லை, வெறும் விளம்பரத்துக்கு நானும் படிக்கிறேன் இலக்கியங்கள் என்று சொல்வதற்காக வாங்குகிறார்களா? ஒழுங்காகப் படிப்பவர்களாக இருந்தால் இப்படியா அடுக்குவார்கள்?  ஒரு புத்தகத்தை உருவினால் எல்லா புத்தகமும் சரிந்து விடும்.  என்ன புத்தகம் என்று பார்த்து, எப்படி படிப்பது?’

சுத்தம் செய்ய வந்த எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று நினைத்துக் கொண்டாள்.  இத்தனை புத்தகங்களைப் படிக்கத் தனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு என்று நினைத்துக் கொண்டாள்.  

கடவுள்தான் தனக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டாள்.

கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் எல்லா புத்தகங்களையும் பிரித்து மேய்ந்து ரகவாரியாகப் பிரித்து அடுக்கி, படிக்கும்படி அழகாக அடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

117

One Comment on “ஸ்ரீராம் /ரசனை கெட்டவர்கள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன