
எக்மோரில் தனி இடத்தில் விஸ்தார பரப்பளவில் உள்ள அந்தப் பழைய
நூலகத்திற்கு நான் வாரம் ஒருமுறை செல்வேன்.
அப்போதுதான் கவனித்தேன். அந்தப் பெண்ணும் அங்கு வருகிறாள் என்று.
நூற்றாண்டாகச் சேகரித்த நூல்களை அங்குப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று.
ஒருமுறை புத்தகம் தேடிக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் கேட்டாள் : “என்ன புத்தகம் தேடுகிறீர்கள்?”
“கவிதைப் புத்தகம்,” என்றேன்.
மடமடவென்று நாலைந்து கவிதைப் புத்தகங்களை எடுத்துக் கொடுத்தாள். ஆச்சரியப்பட்டேன். வாராவாரம் அந்த நூலகத்திற்குப் போவது என் வழக்கம் ஆகிவிட்டது. குறிப்பாக அவளைப் பார்க்க. அவளும் என் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்தில் ஒரு தேநீர் கடையில் காப்பி குடிப்பது வரை எங்கள் நட்பு வளர்ந்து விட்டது.
துணிச்சலாக ஒருமுறை கேட்டேன். “என்னைத் திருமணம் செய்து கொள்கிறீரா?”
அவள் கொஞ்சம் யோசித்தாள். “அடுத்த வாரம் சொல்கிறேன்,” என்றாள்.
ஆவலுடன் அடுத்த வாரம் அவளைச் சந்தித்தேன்.
என் கையில் ஒரு ரோஜாப்பூ கொடுத்து,
“சம்மதம்” என்றாள்.
102
