கஸ்தூரி குருசாமி/புத்தகம் தரும் பாடம்

தினேஷ் ஒரு நேர்காணலுக்குச் சென்றான். அந்த அமைப்பின் தலைவர் இந்தப் படத்தைக் காட்டி உங்கள் மனதில் தோன்றுவதெல்லாம் கூறுங்கள் என்றார். தினேஷ் பதில் சொல்ல ஒரு வினாடி தயங்கினான். பின்பு,

 புத்தகங்கள் அறிவை, பல கருத்துக்களை கூறுபவை.அதுபோல் நம் மனமும் அடிப்படையில் சுத்தமானவை, போற்று தற்குரியது.

புத்தகம் பயன்படாதவண்ணம் தாறுமாறாகக் கலை ந்து இருப்பதால் எடுத்துப் படிக்க இயலாது போல், நாமும் ஒழுக்கம், வலிமை இவற்றைப் பெற்றிருந்தாலும் நல்வழியில் ஒழுங்காகப் பயன்படுத்தத் தவறினால் வாழ்வதில் பயன் இல்லை.மேலும் புத்தகங்களில் ஒன்றை உருவினால் அனைத்தும் கீழே விழுந்து விடும். அதுபோல் வாழ்வில் ஒழுக்கம் மட்டும் தவறினால் வாழ்க்கையை பயனற்றதாகிவிடும். புத்தகம் அறிவு களஞ்சியம்.அதைப் பயன்படுத்த இயலாத வண்ணம் அடுக்கி இருப்பது போல் வாழ்க்கை அருமையானது, அதைத் தீய எண்ணம், பொறாமை, ஒழுக்கமின்மை என்பவற்றால் நிரப்பி விட்டால் வாழ்வே ஒரு சாபமாகும் என்று கூறி முடிக்கும் முன்பே அந்த அதிகாரி உங்களுக்கு “வேலைக்கான ஆர்டர் கொடுக்கச் சொல்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

புத்தகத்துக்கு நன்றி கூறிய வண்ணம் தினேஷ் வெளியில் வந்தான்.

119

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன