ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 36

10.12.2021 – வெள்ளி

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி:  அப்படியென்றால் பரிசு சரியான படைப்பாளிக்குப் போவதில்லையா

அழகியசிங்கர் : பரிசு பெறுபவர் சரியான படைப்பாளியாகத்தான் இருப்பார்கள். அப்படி இல்லாமலும் இருக்கலாம்.  ஆனால் படைப்பாளியைத் தேர்ந்தெடுப்பதற்குச் சிபாரிசு செய்யவேண்டிய நபருக்குத் தெரிய வேண்டும்.  அவருடைய படைப்பு தேவையில்லை.

ஜெகன் :  இந்தப் புத்தகக் காட்சிக்கு விருட்சம் கலந்து கொள்ளுமா?

மோகினி :  இந்த முறை என்னன்ன புத்தகங்கள் கொண்டு வந்துள்ளீர்கள்.

அழகியசிங்கர் : என் கவிதைப் புத்தகத்தைத்தான் கொண்டு வந்துள்ளேன்.  400 கவிதைகள்.
மோகினி :  உண்மையில் இது பெரிய சாதனை.

அழகியசிங்கர் : இன்னும் கவிதைகள் எழுதிக்கொண்டு வருகிறேன்.  அதையெல்லாம் தனித்தனியாகப் புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன்.

ஜெகன் :  உங்களுடைய குறுங்கதைகள் புத்தகம் என்ன ஆயிற்று.

அழகியசிங்கர்: எல்லாவற்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  எப்போதும் முடியுமென்று தெரியாது.

ஜெகன் :முக்கியமாக நகுலன் சிறப்பிதழ் விருட்சம்.  118வது இதழ்.

அழகியசிங்கர் : ஆமாம்.

மோகினி :  தயார் செய்து விட்டீர்களா?

ஜெகன் :  புத்தகக் காட்சிக்குள் முடியுமா?

மோகினி :  முடித்தால்தான் சிறப்பு.

அழகியசிங்கர் : எப்படியாவது முடித்து விடுகிறேன்

மோகினி :   வேற என்ன திட்டம்

அழகியசிங்கர் :  நிறையா புத்தகங்கள் இன்னும் இருக்கின்றன. எப்போது முடிக்கப் போகிறேனென்று தெரியவில்லை.

மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.

அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.

ஜெகன் : இன்று பேசியது போதும்

.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.

                    எழுதியது இரவு 10.47