கீதா ஆர்/மௌன  மொழி

புறநகர்ப்பகுதியில் குடியேறியிருந்தேன்.

புத்தகங்களைக் குழந்தை போன்று மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு கிழவர் அத்தெருவில் நடந்து கொண்டிருந்தது வித்தியாசமாக இருந்தது.

“கிழம் இதோடு 4, 5 தடவை போய்ட்டு போய்ட்டு வந்திருச்சு, வயசான காலத்துல இது தேவையா”

“யாருங்க அவர்?” கேட்டேன்.

“ரிட்டையர்டு பள்ளிக்கூட வாத்தியாரு சம்பாதிச்சதெல்லாம் புஸ்தகம் வாங்கி வாங்கிக் கரைச்சாரு.”

“தெரு முனைல ஒரு பெரிய ஹால் கட்டி அதுல, தான் வாங்கினது, எல்லாரும் தூக்கிப் போடறதுனு எல்லாத்தையும் வைச்சு ஊர்ப்பிள்ளைங்கள வாசிக்கச் சொல்லும்”

“பேப்பர்ல கூட விளம்பரம் கொடுத்துச்சு, யாராச்சும் புஸ்தகம் விலைக்கோ, பழைய ஜாமான் கடைக்கோ கொடுத்தா, எங்கிட்ட கொடுங்கன்னு. இப்ப ஒரு வீட்டுலருந்து எடுத்துட்டுப் போகுது”

அந்த ஹாலிற்கு சென்றேன். வியந்து போனேன். இண்டு இடுக்கு இல்லாமல் வாயில் வளைவில் கூடப் புத்தகங்கள் பிதுங்கிக் கொண்டிருந்தன!

“வாங்க தம்பி, என்ன வேணும்?”

“ஏரியாக்குப் புதுசு. உங்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். ஆச்சரியம். எனக்கும் வாசிக்க ரொம்பப்பிடிக்கும். அதான் வந்தேன்!”

“இதப் பாருங்க…. புது எழுத்தாளர். நல்லா எழுதறார்”

113

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன