நாபா.மீரா/ரோபோக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல வருடங்களாக இயங்கி வரும் பெரிய நூலகம்.

மறுசீரமைப்புப் பணி ஒரு புறம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

அறை வாயிலில் பரணில் பல நாட்கள் இருந்ததன் காரணமாக ஒட்டடை படிந்து காட்சி தரும் புத்தகங்கள்.

செல் அரித்து இன்றோ, நாளையோ என நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்  புத்தகங்கள்.

இந்தக் கணினி யுகத்துல  நம்மள சின்னவங்க தொடங்கி பெரியவங்க வரை யாருமே சீந்துற மாதிரி தெரியலை.

உட்பக்கமிருந்த நவீனக் கட்டமைப்பில் நடுநாயகமாக வீற்றிருந்த கணிணி குரல் கொடுத்தது.

“ஏய் , என்ன பேசுறீங்கப்பா. நாம் திறன்பேசி யுகத்துல இருக்கோம்.”

செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி இதோ அழியுற நிலைமையில் இருக்குற உங்களக் காப்பாத்த முடியாமப் போனாலும் உங்ககிட்ட இருக்குற தரவுகளை டிஜிட்டலைஸ் பண்ணிடுவோம்.

ஆக, நாம எங்க இருந்தாலும், எத்தனை யுகங்கள் கடந்தாலும்,ஏதோ ஒரு முறையில் மக்களோட பயன்பாட்டில் இருப்போம், புரிஞ்சுதா.

திடீரென எழும்பிய காற்றில் ஆடிய பக்கங்கள் சலசலத்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன