ஸ்ரீநிவாஸன்/வேறென்ன வேண்டும் எனக்கு

1.

அன்புடனே நாளும் அரவணைக்கும் உள்ளங்கள்
இன்பமுடன் சூழ்ந்து இசைந்திருக்கும் நல்லுறவு
நம்பிக்கையே வாழ்வில் நலம்தரும் பெருஞ்செல்வம்
வேறென்ன வேண்டும் எனக்கு

2.

காலை மலர்போலக் களிப்புடன் வாழ்ந்திட
நாளும் இறைவனது நாமத்தைப் பாடிட
சீலம் நிறைந்தோர் சிறப்புடன் சூழ்ந்திட
வேறென்ன வேண்டும் எனக்கு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன