
(1)
அறம் பேசி ஆயிரம் அழைப்புகள்
புறம் பேசச் சில அழைப்புகள்
அதன் அகம் பேசினால் தெரியும்,
அலைபேசிக்கு உண்டு அறம்.
(2)
நான் பேசுவதில் சில உண்டு.
நீ பேசுவதில் சில உண்டு.
அறமற்ற பேச்சுக்கள் கேட்பதும் உண்டு.
அலைபேசிக்கு உண்டு அறம்.
(3)
எச்சில் பட்டாலும் கவலை படாது.
கோபம் வார்த்தைகளில் பயம் காட்டாது.
பொய்கள் வருத்தம் கொள்ளாது, எனினும்
அலைபேசிக்கு உண்டு அறம்.
(4)
துப்பிய எச்சில் மழையாய் நனைத்தாலும்,
கத்திய வார்த்தைகள் காது கிழிந்தாலும்,
பிடித்த கைகள் கோபம் கொண்டாலும்,
அலைபேசிக்கு உண்டு அறம்.
(5)
துக்க செய்திகள் கொடுக்க உதவினாலும்,
சிக்கலில் நம்மைச் சிக்க வைத்தாலும்,
அடிமையாக்கி நாளும் அலைய செய்தாலும்,
அலைபேசிக்கு உண்டு அறம்.
(6)
அலை அலையாய் பல செய்திகள்
பேசிப் பேசியே சலித்த உண்மைகள்
அறமுண்டென விலகியே வாதிட்ட தருணங்கள்
அலைபேசிக்கு உண்டு அறம்.
