கரந்தை  இந்து /மறுபடியும்  நட்பு

       காலை  எழுந்ததிலிருந்து  ரம்யா  பரபரப்பாக  எல்லா  வேலைகளையும்  முடித்தாள். இந்த  நாளுக்காக  எத்தனை  வருடங்களாகக் காத்திருக்கிறாள். அவன்  வருவானா?   . பந்தயத்தை இந்தத்  தேதியை  நூலகத்தை  எல்லாம் மறந்திருப்பானா? . எப்படி இருப்பான் ?.

     எனக்கு  வயசான  மாதிரி  அவனுக்கும்   தான்  வயசாகி  இருக்கும்.  ஆனாலும்  அவனின்  மனசு என்னைப்  போலவே  அதே  பதினாறாகத்  தான்  இருக்கும்.

      இருப்பதில் அவளுக்கு  மிகவும்  பிடித்த  சேலையைக் கட்டிக்  கொண்டு  எளிய  மேக்கப்போடு  ஆட்டோவில்  ஏறி  அந்த நூலக  வாசலில்  இறங்கினாள். எங்கும்  புத்தகங்கள் நிறைந்து  கிடக்க  அழகாகப் புத்தகத்தாலே  வாயில்போல்  அமைக்கப் பட்ட  விதம்  பார்ப்பவர்களைக்  கவர்ந்தது.

        “ஹாய்  ரம்யா  , நான் லேட்டா வந்துட்டேனா?  “என்றழைத்தபடி  உள்ளே  வந்தவன்  அவள்  நண்பன்  சேகர். “எப்படி இருக்கே”  இருவரும்  ஒரே  சமயத்தில் கேட்க , சிரித்தபடி  “10 வருடங்கள்  ஓடிப் போச்சு சேகர். நானும்    நீயும் மாறவில்லை என்பது  நாம்  சரியா   பேசி  வைத்தபடி   இன்று இந்த  நூலகத்திற்கு  வந்ததிலேயே  தெரியுது”.

      “பார்க்காத, பேசாத நட்பு  மறந்து விடும் என்று  நீ சொன்னது பொய்யாகிப் போச்சு  தானே.  நான்  நம்  பந்தயத்தில்  ஜெயிச்சுட்டேன்.மறுபடியும்  நம் நட்பைத் தொடரலாமா?”  என்றவளிடம்  சந்தோஷமாகத்  தலையாட்டினான்  சேகர்.

137

One Comment on “கரந்தை  இந்து /மறுபடியும்  நட்பு”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன