
“உன் பையன் நல்லா துறுதுறுப்பா இருக்கான்டி, நல்லா படிக்க வச்சா டாப்ல வருவான்.”
அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சினாள் அடுத்த வீட்டு பத்மா.
கமலம், “ஆமாம், நீ வேற, ஏற்கனவே உள்ள குழந்தைகளையே சரியா வளக்க முடியலை. மூணு வேளை சோறு போடறதுக்கே தலை திருகுது. இதுல நாலாவதா இவன் ஒருத்தன்.”
கமலத்தின் கணவன் ஷண்முகம் ஆட்டோ ஓட்டறான் ஆனா வரும் வருமானத்தில் பாதிக்கு மேல் குடி.மனைவி கமலத்திடம் கொள்ளை அன்பு, அந்த அன்பு நான்கு குழந்தைகளா வீட்டில் உலா வருது.முதல் ரெண்டும் பெண் மூணாவது பையன், கடைசி இந்தக் குட்டிப்பையன்.
பத்மா, கண்ணன் தம்பதிகளுக்குக் கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆச்சு, குழந்தை பாக்யம் இல்லை.கண்ணன்தான் சொன்னான்” உன் தோழி கமலா நாலு பெத்துப் போட்டிருக்காளே கடோசிப் பையனைக் கேளேன் ஸ்வீகாரம் கொடுப்பாகளானு.”
பத்மாவும் மெதுவா அந்தப் பேச்சை எடுத்தா கமலத்து கிட்டே.
“இந்தப் பாரு பத்மா, உன்னை எனக்குப் பிடிக்கும், அதுக்காக என் குழந்தையைக் கேட்டா கெட்ட கோபம் வரும்.இன்னும் ரெண்டு பெத்தாலும் யாருக்கும் தரமாட்டேன், உனக்குக் குழந்தை பிறந்தாதான் அதோட அருமை தெரியும்.”
அடுத்த வாரமே கமலம் குடும்பம் வீட்டைக் காலி செஞ்சிட்டு எங்கேயோ போயிடுச்சு.
122
