
கல்லில் செதுக்கிய வார்த்தைகள்
ஆனால் சொல்லில் வரவில்லை
பார்வையில் பரிமாறிய பாஷைகள்
ஆனால் சொல்லில் வரவில்லை
மனதில் சொல்லிய வார்த்தைகள்
ஆனால் செல்லில் கூட வரவில்லை
அன்பில் முன்னர் கிடைத்த இதம்
அருகி போனது அன்பு உருகும் மனது
கண்ணில் கண்ட கண்ணீர் திவலைகள்
பல நாட்கள் தொடர்பில் இல்லாத மகனின்
அம்மா என்ற சொல் காதில் விழ
தாயின் ஏக்க எதிர்பார்ப்பு
விற்கப்போகும் வீட்டிற்கு அம்மாவின்
கையொப்பம் வேண்டி வந்த திடீர் பாசம்
சொல்லில் வந்த ஆனந்தம் அம்மா ஏக்கம்
தீர்ந்தது உயிர்ப்பு வந்தது மகன் குரல் கேட்டு !!!
