செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம்

நிறைய கோவில்களில் பிரகாரத்தில் நுழையும் போது இடது புறம் சூரிய பகவானுக்கு தனி சன்னதி பார்த்திருப்பீர்கள் .

நவகிரக சன்னதியில் பொது பரிகாரமாக இல்லாமல் ஜாதகத்தின் தோஷம் தீர்க்க   சூரியனின் தனி சன்னதியில் பரிகாரம் செய்பவர்கள் சிவப்பு மலர் சாற்றி , கோதுமை தானியம் வைத்து தீபம் வைத்து ஞாயிறு கிழைமைகளில் பூஜிப்பர் .

அதை போல் நிறைய சிவன் கோவில்களில் சந்திரனுக்கு தனி சன்னதியும் இருக்கும்

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்து இரண்டாவதாக வருபவர் சந்திரன் .. சூரிய சந்திரரை நம் கண்களோடு ஒப்பிட்டு கூறுவர் .  

சூரியன் நம் ஆத்மாவை இயக்குகிறது. சந்திரன் நம் மனதை செயல்படுத்துகிறது.  ஆணவத்தையும் கர்வத்தையும் நீக்குபவர் சூரியன் .

சந்திரனை புத்தி காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்கின்றனர்.

பொதுவாக கோவில்களுக்கு செல்லும்போது மனம் ஒன்று பட்டு வழிபட சூரிய பகவானிடம் வேண்டி கொண்டு பின்னர் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் மனம் ஒருமுகப்படுத்தி வேண்டி கொண்டு திரும்பி வரும் போது வலது புறம் உள்ள சந்திரபகவானிடம் நல் புத்தி தரும் படி கூறி வேண்டி கொண்டு வீடு திரும்ப வேண்டும் .  

சூரிய பகவானால் யோகம் யாருக்கு? | Om Tamil calendar

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன