செல்லம் சேகர்/ஏ ஐ யும் சுட்ட பழமும்

கண்ணா குலசாமி மன்னிச்சுக்க ராசா

அந்த நேரம் பார்த்து பாட்டியின் பேத்தி டியூஷன் கிளாசில் இருந்து வீட்டிற்கு வந்தாள்.

என்ன பாட்டி “இவன் கூட மல்லு கட்டறே”?

அவன் மொபைல் பாக்கணும்னு கேக்கறான் ?

“கொடுக்காதே பாட்டி …அவன் நாலாம் கிளாஸ்சுக்கே கண்ணாடி போட்டுண்டாச்சு ,,,இந்த தடவை அவன் கிளாஸ் டீச்சர் கூட என்னை கூப்பிட்டு சொன்னா …அவன் ஹோமோ ஒர்க் எல்லாம் ஒழுங்கா பண்ணிண்டு வர்ரதில்லைனு அதனாலே கொடுக்காதே நான் மாடிக்கு படிக்க போறேன் . 

“ராசா விபு இன்னிக்கு ஒரு நாள் என் பேச்சை கேளு …அடுத்த முறை உங்க அப்பா அம்மா வெளிய போறப்ப முதவே நான் பர்மிசன் வாங்கறேன்”

அதெல்லாம் இல்லை என்னை மொபைல் பார்க்க விடு இல்லேன்னா நான் கேக்கற சுட்ட பழத்தை கொண்டு வந்து கொடு !!!

சாமி ராசா உன்னை பிள்ளையாரை நினைச்சு குட்டு போட்டுடறேன் உங்க அப்பா அம்மா வர வரைக்கும் மொபைல் கேக்காதே !!

வீட்டை ரணகள படத்தறான் விபு ….சாப்பிடும் நேரம் வந்து விட்டது ஓயவில்லை

பாட்டி மாடிக்கு சென்று “ரம்யா நீ ஒரு உதவி பண்ணு,,,நீ நாலு இடத்துக்கு போறவ இங்கே அங்கே போய் இருக்கே …எது வேணும்னாலும் அம்ஜாங்ல கிடைக்கும்னு சொன்னாயே ஒரு உதவி பண்ணு “

“சொல்லு பாட்டி”

“பேராண்டி சுட்ட பழம் கேக்கறான்”

“அது என்ன சுட்ட பழம் மொபைல் தானே கேட்டு அடம் பண்றான்  .

“அது எங்கேந்து சுட்ட பழம் வந்தது விபுவிற்கு “

அது போன வாரம் நீங்க எல்லாம் வெளில போனப்போ அவனுக்கு சாப்பாடு வைக்கும்போது அவன் கிட்டே ஒரு முருகன் கதை சொன்னேன் … அப்போ முருகன் நினைச்சா சுட்ட பழம் கூட உண்டாக்க முடியும்னு சொன்னேன் “

“சரி இன்னிக்கு மொபைல்க்கும் சுட்ட பழத்துக்கு என்ன சம்பந்தம் ஏன் கேக்கறான் ” 

மாடிக்கு வந்த விபு ” ஹும் எனக்கு இப்போவே மொபைல் பைக் ரேஸ் பாக்கணும் இல்லைனா ஏதாவது புதுசா வேணும் …எப்போவும் கிடைக்கறது இல்லாம புதுசா இந்த சுட்ட பழம் கேட்டா பாட்டி குடுக்க முடியாது …அப்போ மொபைல் குடுத்துடுவாளே . எப்படி என் ஐடியா ?

பாட்டி நீ மாட்டினே…எவ்வளவு நேரமா இந்த சண்டை உங்களுக்குள்ளே நடக்குது “

“அது கிடக்கு காலைல நீங்க எல்லாம் வெளில போனாப்போலேந்து சுட்ட பழம் கேக்கறான் ரம்யா “

சரி பாட்டி கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்திற்கு மேல அவன் மொபைல் பாக்கலை…இதுவும் நல்லதுதான் …போனா போறது பாட்டி நீ ரொம்ப நல்ல சமாளிச்சு இருக்கே . இனிமேலும் அவனை அளவிட வேண்டாம் …ஒரு அரை மணி நேரம் மொபைல் பாக்கட்டும்…அப்பறம் அவன் ஸ்கூல் ஒர்க் பண்ணட்டும் ”  

அவ்வளவுதான் பாட்டி பேயறைந்தார் போல் ஆகி விட்டார் .

“இரு தாகமா இருக்கு கீழே போய் தண்ணி குடிச்சுட்டு மொபைல் எடுத்தாரேன் “என்று ஓடி விட்டாள்  

விபுவும் ரம்யாவும் காத்திருந்தார்கள் சுமார் கால் மணி நேரம் ஆகியும் பாட்டி வரவில்லை

கீழே இறங்கி வந்து பார்க்கிறார்கள் விபுவும் ரம்யாவும்.

பாட்டி அவர்கள் வீடு சுவற்றில் சிரித்தபடி இருக்கும் யாமிருக்க பயமேன் என்று போட்டுள்ள முருகன் படத்தின் எதிரில் கைகூப்பி கூறி கொண்டு இருக்கிறாள்     

“எல்லாரும் மொபைல் பாக்கறாங்களேன்னு ஒரு ஆசையில எடுத்து பாக்கறப்போ கீழே விழுந்து உடைந்து விட்டது. அதை சொல்ல முடியாமல் கண்ணுக்கு நல்லதில்லைனு பொய் சொல்லி மாட்டிகிட்டேனே!!

எப்படி சமாளிப்பேன் …இந்த பயல் என்னடானா சுட்ட பழம் கொண்டு வந்து குடுன்னு சொல்றானே !1

“அப்பனே முருகா மொபைல்ல என்னமோ உலகம் பூரா ஏ ஐ னு என்னவோ எல்லாம் சொல்றாங்களே மந்திரமோ மாயமோ அத்த வெச்சு எப்படியாச்சும் ஒரு சுட்ட பழத்தையாவது கொண்டாந்து குடு ” 

இதை கேட்ட பேரனும் பேத்தியும் ” என்ன பாட்டி மொபைல் ஐ உடைச்சுட்டாயா … ” ஒரு சேர குரலில்

பாட்டி ரெண்டு ஆட்டில் ஒரு ஆடு முழிக்கிற கதையாக முழிச்சுட்டு ” நீங்க எல்லாம் எந்நேரமும் அதை பாக்கறதால அப்படி என்னதான் இருக்குனு எடுத்து அப்படி தடவி பாத்தேன் . பாடிச்சு….பேசிச்சு …இன்னும் நகத்திட்டே இருந்தேன் .  என் வயசு கூட்டாளி போன் வெச்சுட்டு டம்பு டம்பு னு பேசிச்சா அது கேக்க சொல்லோ கைலேந்து மொபைல் கீழே விழுந்துடுச்சு”

“அய்யய்யோ …அப்போ நீ சுட்ட பழம் குடு இல்லலேன்னா இந்த மாதம் உன் குத்தகை பணம் வெச்சு புது மொபைல் வாங்கி குடு “

அப்போது வீட்டிற்குள் வந்த மகனும் மருமகளும் கவலை படாதே அம்மா நாங்கள் எல்லாம் கேட்டு கொண்டு தான் வந்தோம் … நல்ல மொபைல் எங்க கிட்டே இருக்கு …அவன் பாக்கற மொபைல் ஏற்கனவே உடைந்து தான் இருந்தது …. நீ பயப்படாதே ..

சுட்ட பழம் உடைந்த மொபைல் தான் என்று அனைவரும் சிரித்தனர் .

பாட்டி முருகனை கும்பிட்டபடி நகர்ந்தாள் …பாட்டிக்கும் போன் ஆசை விடவில்லை 

செல்லம் சேகர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன