
(1)
“என் வழி தனி வழி”
ஜதி சொன்னவரும் விதி விலக்கல்ல…
மதி வென்றவரும் விதி விலக்கல்ல…
விதியின் வழி எதுவோ.
(2)
நாம் செல்லும் வழி அது
செல்ல கூடாத வழி இது
விதி நடத்தும் வழி எது?
விதியின் வழி எதுவோ.
(3)
ஏன் நமக்கு மட்டும் இப்படி?
கேள்விகள் எழும் பல சமயம்,
பதில் தெரிந்தும் கேட்கப்பட்டும் கேள்வி
விதியின் வழி எதுவோ.
(4)
நேற்று நாம் இருந்தது அப்படி
இன்று நாம் இருப்பது இப்படி
நாளை நாம் இறப்பது எப்படி
விதியின் வழி எதுவோ.
(5)
காதல் வந்த காரணம் எது?
தோல்வியில் முடிந்த காரணம் எது?
திருமணத்தில் முடிந்த காரணம் எது?
விதியின் வழி எதுவோ.
(6)
காதல் சில கல்யாணத்தில் முடிவதும்…
ஒரு சில கவிதையில் முடிவதும்…
வேறு சில கண்ணீரில் முடிவதும்…
விதியின் வழி எதுவோ.
(7)
அறம், பொருள், இன்பம் என
வள்ளுவன் வரிசை படுத்தி வைத்தான்
வல்லவன் வரிசை எப்படி இருக்கும்?
விதியின் வழி எதுவோ.
