
பத்து ஆண்டுகளுக்குப் பின் செவ்வந்திக்கு குழந்தை பிறந்ததாக கேள்விபட்டு பார்க்க வந்திருந்தாள் கருப்பாயி.
“பாத்து பத்து வருஷமாச்சுடி, உன் வீட்டை கண்டுபிடிக்கறதுக்குள்ள உசுரே போச்சு”
குழந்தையை கையில் வாங்கி கொஞ்சினாள்.
“ஏன் செவ்வந்தி? தப்பா நினைக்காதே… உரிமையா கேட்கிறேன், நீயும் அவரும் கருப்பு தானே”
“ஆமா”
“இவன் எப்படி இவ்ளோ செகப்பா? தத்து எடுத்திங்களோ”
“இவன் எப்படி இவ்ளோ செகப்பா? தத்து எடுத்திங்களோன்னுதான் கேட்டேன்”
“தப்பு கருப்பாயி”
“இல்லங்க, சட்டுனு தோணி கேட்டுட்டு அப்புறம் விளையாட்டுக்கு கேட்டேன்னு சமாதானம் பண்ணிட்டேன் “
“வெரிகுட்”
“ஆனா, சந்தேகம் அப்படியேதான் இருக்கு”
“அட கருப்பாயி, உங்க அப்பா அம்மா கூடத்தான் அட்ட கருப்பு. நீ செவப்பா பொறக்கலையா? இதெல்லாம் பாட்டன் பூட்டன் கால ஜீனா கூட இருக்கும்”
திருதிருவென விழித்தாள் கருப்பாயி.
