
“என்னடி சரோஜா! கைல குழந்தை.. யாரோட குழந்தை?”. தவடையில் கைவைத்து நீலா வியந்தாள்.
” அட அதை ஏன் அக்கா கேக்கறீங்க? இவர் எப்படி பார்த்தாலும் அகத்தியரிஷி ஆகாசமுனின்னு படிச்சு சாவில்லாத வாழ்வு கண்டுபிடிக்கறேன்னு அலைவார்னு தெரியும்தானே? அப்பப்ப எதையாவது அரைச்சு, கரைச்சு. இவரே அதை சாப்பிட்டேன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருப்பார். நேற்று அது மாதிரி ஏதோ பண்ணிகிட்டு இருந்தாரு. காலையில் யாரோ உதைக்கிற மாதிரி இருக்குன்னு திரும்பிப் பார்த்தா இப்படி படுத்திருக்கிறார். இப்ப இவரை நான் எப்படி பழைய மாதிரி மாற்றுவது யாரிடம் போறதுன்னு தெரியலை.. ரொம்ப கவலையா இருக்கு அக்கா… யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்” என்றாள் சரோஜா.
அவள் கையில் இருந்த அவள் கணவன் அவளைப் பார்த்து மோகனமாக சிரித்தான்.

கதை ரொம்ப வித்தியாசமாக கடைசியில் சிரிக்கவும் வைத்தது!
கீதா