சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/வறுமையில் செம்மை

.

123 வார்த்தைகள்

” வண்டியை நிறுத்துங்க குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கணும் “

அவள்   கீழே இறங்க தடுக்கி உணவு கூடை கீழே சிதறியது.

  தூரத்தில் ஒரே ஒரு சின்ன வீடு தென்பட்டது.   “இங்கே குழந்தைக்கு உணவு கேட்க வேண்டுமா!” யோசித்தாள்.

குழந்தை  சிணுங்கி கொண்டு பெரிதாக அழத் தொடங்கியது.

உள்ளிருந்து ஒரு பெண் வர,

” குழந்தைக்கு சோறு தரவா!”

, அது ஒரு ஏழை பட்ட குடும்பமாகவே தென்பட்டது.
கிண்ணத்தில்  சோறை எடுத்துக் கொண்டு வந்தாள் அந்தப்பெண்.

” பக்கத்துல கடகண்ணி ஒன்னும் கிடையாதும்மா. சோத்தை குடுங்க குழந்தைக்கு.”

அந்த சோற்றை பார்த்தாலே பிடிக்கவில்லை.  சோற்றில் ஒரு கரண்டி ரசம் மட்டுமே ஊற்றி இருந்தது.  வேறு வழி இல்லை என்று குழந்தைக்கு ஊட்டினாள்

குழந்தையும் அழுகையை நிறுத்தி சிரிக்க தொடங்கினான்.

”  நீங்களே கஷ்டப்படுறீங்க அதுல எப்படி எல்லாருக்கும் இப்படி உபசரிக்கிறீங்க?”

“ஆமாமா வீட்ல எங்களுக்கு படிப்ப கொடுக்கல, ஆனா தினம் தனியா ஒரு பிடி சோற எடுத்து வைக்க சொல்லி கொடுத்து இருக்காங்க. இப்படி யாராவது பசியோட வந்தா கொடுக்கலாமில்ல.”

சிதறிய பருப்பு சோறும் நெய்யும் அவளை பார்த்து சிரித்தது போல் இருந்தது.

எழுதியவர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன