
அன்னம்மா குழந்தையைத் தூக்கிட்டு வந்து விட்டாள். இது அவளுடைய 5வது குழந்தை. இது சாமர்த்தியமான குழந்தை.
அவள் இடுப்பை விட்டே இறங்க மாட்டேங்கறது.
கொஞ்சம் இறக்கி விடலாமென்று பார்த்தால் பெரிதாகக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறது.
அன்னம்மாவைப் பார்க்கிறவங்க அவள் இப்படி குழந்தையைத் தூக்கிண்டு எங்கும் போகிறாளே என்ற பரிதாப உணர்ச்சி அவ மீது எல்லோருக்கும் ஏற்படாமல் இல்லை.
அன்னம்மா அவ தங்கை வனஜாவைப் பார்க்க வந்தாள்.
“வனஜா, ஒரு நிமிஷம் குழந்தையை வைத்துக் கொள்ளேன். நா கடைக்குப்போய் உருண்டை வெல்லம் வாங்கிட்டு வரணும்,”
என்று குழந்தையை வனஜாவிடம் கொடுத்தாள்.
வனஜா அன்னம்மா வீட்டுப் பக்கத்தில்தான் இருக்காள்.
குழந்தைக்கு இன்னொரு மடி கிடைத்து விட்டது.
ஆனா அவளையும் குழந்தை கீழே இறக்க விடலை.
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாள் வனஜா.
