ரேவதி பாலு /பொறுப்புத் துறப்பு

“ஏய் தங்கம் நீ இங்கேயா இருக்க?”
இடுப்பில் இடுக்கிய குழந்தையுடன் திரும்பிய தங்கம் தன் பள்ளி தோழி லீலாவை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.

“என்ன லீலா ? நீ கல்யாணம் ஆகி அமெரிக்கா போயிட்டேன்னு சொன்னாங்க?

“அங்கேதான் இருக்கிறேன் . சும்மா இந்தியாவுக்கு ஒரு ட்ரிப் வந்திருக்கோம்.”

” அவர் இந்த ஊரிலேயே ஒரு டீ கடை வச்சிருக்காரு. வீட்டுக்கு போகலாம் வா.”

“உனக்கு எத்தனை பசங்க லீலா?” தங்கம் கேட்க லீலா அவளை ஏறிட்டு சிரித்தாள் .

“அங்க அமெரிக்காவில் எல்லாம் இப்போ குழந்தை பெத்துக்காம இருக்கிறது தான் ஃபேஷன். அதை dink (dual income no kids) என்று சொல்லுவாங்க. புருஷன் பொஞ்சாதி இரண்டு பேரும் சம்பாதிப்பாங்க ஆனா குழந்தைங்க வேணாம்னு வாழ்ந்துகிட்டு இருப்பாங்க”

வீட்டிற்குள் அவர்கள் நுழைந்ததுமே அம்மா என்று உள்ளே இருந்து இரண்டு சிறு குழந்தைகள் ஓடி வந்து தங்கத்தை கட்டிக் கொண்டன.
” மலப்புரத்துல மண் சரிஞ்சு நிறைய பேரு இறந்து போயிட்டாங்க. அதுல பொழச்ச குழந்தைங்க இவங்க. எங்க வீட்டுக்காரர் தான் காப்பாத்தி கூட்டிட்டு வந்தாரு . எங்க வீட்டிலேயே வச்சு என் புள்ள பாபுவோட சேர்த்து இவங்களையும் வளர்க்கிறோம்”
தங்கம் கம்பீரமாக சொல்ல லீலாவின் தலை தானாக கவிழ்ந்து கொண்டது

One Comment on “ரேவதி பாலு /பொறுப்புத் துறப்பு”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன