ஜே. செல்லம் ஜெரினா/சித்ராவின் குழந்தை!

“சித்ராக்கா நீ வேலைசெய்ற இல்லத்துலே இவனை சேர்த்துடுறீயா! “

“ச்சீ! வாயைக் கழுவு. கல்லுகுண்டாட்டம் பெத்தவங்கயிருக்க பச்சைமண்ணை அனாதைன்னு சொல்றே “

“எந்தலையெழுத்துக்கா! இவன் நார்மலா இல்லேன்னு உனக்கே தெரியுமே! இவங்கப்பனுக்கு அவமானமாயிருக்காம்..இவனை தலைமுழுகிட்டு வான்னு புருஷன் படுத்துறான். “

“பெத்தபுள்ளையை விட புருஷன் பெரீசாப்போயிட்டானா?”

“அய்யோ! அவேன் அடிச்சே கொன்றுவான். ஆத்தாவூட்டுலேயும் நாதியில்லேக்கா. எங்கனா உசிரோட இருக்கட்டுமே! “

அமுதா அழுதாள். இடுப்பிலிருந்த குழந்தை பரப்பிரம்மமாய் சிரித்தது. .பட்டென அமுதா கன்னத்தில் அடித்தது.

அது ஆட்டிசக் குழந்தை.
சித்ராவுக்கு பக்கத்து டவுனில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் வேலை..
திருமணமாகி ஏழெட்டு வருடமாகியும் குழந்தையில்லை.சம்பளம் குறைவேயானாலும் மனதிருப்திக்காக இங்கே சேர்ந்தாள்.

மாதமொருமுறை இங்கே அம்மாவைப் பார்த்துவிட்டு போவாள்.

குழந்தைக்கு அழுந்த முத்தமிட்டு தலைப்பால் வாயைத் துடைத்த அமுதா திகைத்து நின்றவளின் கையில் குழந்தையை திணித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வெளியேறினாள் .

சித்ராவின் கன்னம் “புர்ரென்ற” எச்சில்மழையில் நனைந்தது

குழந்தை கையை மூடிமூடி திறந்தான்.

அவனையே பார்த்திருந்த சித்ராவின் கணவன் கேட்டான்.

“நாமளே வளர்ப்போமா? “

சித்ரா கண்ணீர் மினுங்க தலையாட்டினாள். மனைவியை ஆதுரமாய் அணைத்தான் கணவன்.

“ப்ப்ப்பா “என்று எச்சிலொழுக சிரித்து தாவினான் குழந்தை.

         சுபம்! 

மொத்த வார்த்தைகள் 125

    மறுமொழி இடவும்

    உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன