
கமலிக்கு மணமாகி ஒரு குழந்தை,
அவள்கணவன் ராமன் ஒரு ஐடி ஊழியர், கமலி வேலைக்காக அலைந்த சமயத்தில், அவள் சகோதரி நர்மதா படிப்பதற்காக சென்னைக்கு வந்து கமலி வீட்டில் தங்கினாள்.
வேலைக்காக கமலி அலைந்த சமயத்தில் நர்மதா குழந்தையை பார்த்துக் கொண்டாள்.
கமலிக்கு வேலை கிடைத்ததும், நர்மதா படிக்க கல்லூரி செல்வதா, சகோதரி குழந்தையை பார்ப்பதா என்ற குழப்பத்தில்,குழந்தை வளரும் வரை கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் மூலமாக படித்து முடித்தாள். அதற்குள் குழந்தையும் வளர நர்மதா வேலைக்குபோக ஆரம்பித்தாள்.
இதற்குள் கொரானா சமயத்தில் வீட்டில இருந்தே வேலை என்பதால் கமலி சந்தோஷப்பட்டாள்.
