
பாரதி என்ற சொல்லில்
பற்றி எரிக்கிறது ஒரு தீ…
அவன் பாதம் பற்றி
வரையச் சொல்லுது ஒருகவி..
விண்ணைத் தொட்டு
எம்மை ஆடச்சொன்ன கவி…
விடிவெள்ளி என்றே
எமை அழைத்தக் கவி…
ரௌத்திரச்சொற்களை
எமக்குள் ஊட்டி வளர்த்தக் கவி…
எமனையும் வாடா என்றே
எமக்கு உரம் ஊட்டியக் கவி…
அடுப்படியை ஓரங்கட்டி
நூல்எடுத்து படிக்கச் சொன்ன கவி…
நூற்றாண்டைக் கடந்து
நிற்கும் எங்கள் மகாகவி…
எட்டையப்புரத்தில் எழுத்துகளால்
கோட்டைக்கட்டியக் கவி..
எட்டா உயரத்தில் எம்இதயத்தில்
என்றும் வாழும் எம்தாயுமானவர் கவி…
பாரதிஉம்மை நினைத்துவிட்டால்
எமக்குள் மீசை முளைக்குதடா…
உன்முண்டாசு எம்தலையில் ஏறி
எழுத்து சிம்மாசனத்தில் அமர
வைக்குதடா…
பாரதியே… கலைமகனே…
என்னைக் கவிபடைக்க வைத்த
திருமகனே…
போற்றுகின்றேன் என்விழிநீரால்
வாழ்த்துகின்றேன் நீ தந்த கவிநாவால்…
தந்தையே …உம்மையே வணங்குகின்றேன்…
அறம்பாடிய உன்நாவே
இறை என்பேன்…
எங்கள் அனைவரையும் வாழவைக்கும்
மகாகவியே வாழ்கவென்பேன்.
